BREAKING NEWS
latest

World News - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest World News News, Articles, World News Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Tuesday, August 17, 2021

ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றம் விமானப்படை விமானி சுமார் 800 மக்களை காப்பாற்றிய நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

ஆப்கானிஸ்தானில் இருந்து நேற்று புறப்பட்ட விமானத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை; 800 மக்களை காப்பாற்றிய நெகிழ்ச்சியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது

Image : மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விமானம்

ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றம் விமானப்படை விமானி சுமார் 800 மக்களை காப்பாற்றிய நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

ஆப்கானிஸ்தானில் அரசு ஆட்சியை கவிழ்த்து தாலிபான் அந்நாட்டை கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிமிடங்களிலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். நேற்றைய தினம் தாலிபான் நாட்டை கைப்பற்றிய தகவல் அறிந்த பொதுமக்கள் காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்பு வளையங்களை தகர்த்தெறிந்து உள்ளே புகுந்தனர. அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடிய நிலையில் அவர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் எந்த ஒரு பயண அனுமதியும் இல்லாமல் அங்கு நிறுத்தி வைத்திருந்த விமானங்களில் ஏறிய பிறகு விமானங்களை இயக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே அங்கு ஏற்பட்ட நெரிசல் மற்றும் கூட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டிலும் பலர் உயிரிழந்தனர். மேலும் அங்கிருந்து அமெரிக்கா ராணுவத்திற்கு சொந்தமான Boeing C-17 Globemaster விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான மக்கள் சூழ்ந்திருந்த நிலையில் சிலர் விமானத்தின் வெளிப்புறத்தில் தொங்கியபடி பயணிக்க முயற்சி செய்தனர். தொடர்ந்து விமானம் பறந்து உயர்ந்த அடுத்த சில நிமிடங்களில் விமானத்தின் வேகம் மற்றும் காற்றின் அழுத்தம் காரணமாக சிலர் ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சோகமான காட்சிகளும் வெளியாகி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் அந்த விமானத்தின் விமானியின் மனிதாபிமான அடிப்படையில் செய்த சாஹசமான செயல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த விமானத்தில் எந்த அனுமதியும் இல்லாமல் புகுந்த நபர்களை வெளியேற்ற வேண்டும் என்பது சர்வதேச சட்டமாகும். ஆனால் விமானி அதில் புகுந்த சுமார் 800 ஆப்கானிஸ்தான் மக்களுடன் அங்கிருந்து புறப்பட்டார். இந்த விமானம் போர் நேரத்தில் சிறிய விமானங்கள் ஹெலிகாப்டர் மற்றும் போர் ஆயுதங்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தும் சரக்கு விமானம் ஆகும். மேலும் அந்த விமானத்தில் போருக்கு தேவையான அனைத்து பொருட்களுடன் சுமார் 134 வீரர்கள் அமர்ந்து பயணிக்கும் விதத்திலான இந்த விமானத்தில் தான் இவ்வளவு மக்கள் புகுந்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி கத்தார் வான்வெளியில் வைத்து அங்குள்ள Al Udeid விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் அதிகாரிகளுடன் விமானப்படை விமானி நடத்திய உரையாடலின் ஆடியோ வெளியான நிலையில் தெரியவந்துள்ளது. அந்த ஆடியோவில் உங்கள் விமானத்தில் எ‌த்தனை பயணிகள் உள்ளனர் என்று கேட்க.... சுமார் 800 பேர் வரையில் உள்ளதாக கூறுகின்றார். இதை கேட்டு விமான நிலைய அதிகாரி அதிர்ச்சியில் ஏன்ன பேசுவது என்று தெரியாமல் சில நொடிகள் அமைதியாக இருந்த பிறகு அட கடவுளே என்று கூறும் உரையும் அதில் இடம்பெற்றுள்ளது.இதன் மூலம் சாதாரணமாக அழைத்து செல்ல வேண்டிய பயணிகளை விடவும் 6 மடங்கு பயணிகளை அவர் விமானத்தில் ஏற்றி மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த விமானம் சுமார் 77,867 கிலோ வரையிலான எடையினை சுமந்து செல்லும் திறன் கொண்டது ஆகும். அங்கு பிரச்சனை அதிகமாகும் முன்னர் எவ்வளவு மக்களை காப்பாற்ற முடியுமோ அவ்வளவு மக்களை காப்பாற்ற அவர் இதை செய்தார் என்ற நெகிழ்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் விமான உற்பத்தி நிறுவனமான போயிங் நிறுவனத்தின் அதிக எடையை எடுத்துச்செல்லும் வகையிலான விமானம் இதுவாகும். தற்போதைய உலகின் மிகவும் திறன் வாய்ந்த விமானங்களில் இதுவும் ஒன்றாகும். 1995 முதல் அமெரிக்க விமான படையில் இந்த விமானம் இடம்பெற்றுள்ளது. இந்த விமானம் அதிரடியாக மீட்பு நடவடிக்கைக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படும். எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இதை பயன்படுத்த முடியும். சிறிய விமான ஓடுபாதையில் இறங்கவும், பறந்து உயரவும் முடியும் திறன் படைத்தது. மணிக்கு 830 கிலோமீட்டர் வேகத்தில் இந்த விமானத்தால் பறக்க முடியும். அதிகபட்சமாக 45,000 அடி உயரம் வரையில் பறக்க முடியும். அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இந்தியா, குவைத், கத்தார், அமீரகம், கனடா, ஆஸ்திரேலியா, யு.கே உள்ளிட்ட நாடுகளும் இந்த விமானத்தை பயன்படுத்தி வருகிறது.

Add your comments to World News

Friday, April 9, 2021

அமெரிக்காவில் இந்திய தம்பதிகள் குத்தி கொலை செய்யப்பட்ட துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

அமெரிக்காவில் இந்திய தம்பதிகள் குத்தி கொலை செய்யப்பட்ட துயரமான செய்தி அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Image : உயிரிழந்த பாலாஜி மற்றும் மனைவி

அமெரிக்காவில் இந்திய தம்பதிகள் குத்தி கொலை செய்யப்பட்ட துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

அமெரிக்காவின் நியூஜெர்சியில் இந்திய தம்பதிகளான மென்பொருள் பொறியாளர் பாலாஜி பாரத் ருத்ராவர்(வயது-32) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி பாலாஜி(வயது-30) ஆகியோர் புதன்கிழமை இரவு நியூ ஜெர்சியிலுள்ள வடக்கு ஆர்லிங்டன் போரோவில் உள்ள அவர்களது வீட்டில் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பாலாஜியின் தந்தை பாரத் ருத்ராவர் அவர்கள் பி.டி.ஐ-யிடம் தெரிவித்துள்ள செய்தியில்,அவர்களது நான்கு வயது மகள் வீட்டின் பால்கனியில் இருந்து தொடர்ந்து அழுவதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போது இருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது என்றார். காவல்துறையின் விசாரணைக்கு பிறகே இருவரின் மரணத்திற்கான காரணம் கண்டறிப்படும் என்று அமெரிக்கன் புலனாய்வாளர்கள் கூறியதாக தந்தை தெரிவித்துள்ளார். இதில் மிகவும் சோகமான செய்தி என்னவென்றல் ஆர்த்தி ஏழு மாத கர்ப்பமாக இருந்தார். சில அமெரிக்க செய்தி ஊடகங்கள், பாலாஜிக்கும், ஆர்த்திக்கும் வயிற்றில் குத்தப்பட்ட காயங்கள் இருந்தது எனவும்,வீட்டில் இழுபறி ஏற்பட்டது போன்ற அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் தெரியவரும் எனவும், உடலை வீட்டிற்கு(இந்தியா) கொண்டு வர ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் எனவும், பேரக்குழந்தை இப்போது பாலாஜியின் நண்பருடன் இருப்பதாக பாரத் கூறினார். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி, தனது மனைவி ஆர்த்தியுடன் 2015 இல் அமெரிக்கா சென்றார். இவர்களுக்கு 2014 டிசம்பரில் திருமணம் நடந்துள்ளது. அமெரிக்கா செல்வதற்கு முன்பு பாலாஜி ஒரு முன்னணி இந்திய மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Add your comments to World News

Tuesday, March 16, 2021

விமானத்தில் முகக்கவசம் அணியுமாறு கூறிய நிலையில்; இருக்கையில் சிறுநீர் கழித்த நபர் கைது செய்யப்பட்டார்

விமானத்தில் முகக்கவசம் அணியுமாறு பணிப்பெண் கூறிய நிலையில்; இருக்கையில் சிறுநீர் கழித்த நபர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது

Image credit: FBI

விமானத்தில் முகக்கவசம் அணியுமாறு கூறிய நிலையில்; இருக்கையில் சிறுநீர் கழித்த நபர் கைது செய்யப்பட்டார்

அமெரிக்காவில் விமான ஊழியர் முகக்கவசம் அணியுமாறு கேட்டதை அடுத்து இளைஞன் ஒருவர் தனது இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் இவ்வாறு தவறாக நடந்து கொண்டதாக 24 வயதான லாண்டன்-கிரேயர் என்ற இளைஞரை FBA அதாகாரிகள் கைது செய்துள்ளனர், பின்னர் அந்த இளைஞரை டென்வரில் உள்ள யு.எஸ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முன்னர் விமான பணிப்பெண் லாண்டன்-கிரேயரிடம் முகக்கவசம் அணியுமாறு பலமுறை கேட்டுக்கொண்டார்,ஆனால் அவர் தூங்குவது போல் நடித்துக்கொண்டிருந்தார் எனவும் இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் முகக்கவசம் அணியுமாறு கேட்டு பணிப்பெண் லாண்டனை அணுகியபோது அந்த நபர் தனது இருக்கையில் சிறுநீர் கழிப்பதாக FBA ஒருவர் அதிகாரி கூறினார்.

இது தொடர்பாக லாண்டரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விமானத்தில் ஏறுவதற்கு சற்று முன்பு தான் அதிகமாக பீர் குடித்துவிட்டு வந்ததாகவும்,நான் சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது எனவும்,எனவே விமானத்தில் என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ள முடியவில்லை என்றும் கூறினார். FBA சிறப்பு அதிகாரி மார்ட்டின் டேனியல் கூறுகையில், விமான ஊழியர்களை அலட்சியப்படுத்தியது மற்றும் சிறுநீர் கழித்தது உள்ளிடவை இளைஞருக்கு நிலவு இல்லை எனவும்,அந்த இளைஞன் 10,000 டாலர்கள் கட்டிவைத்த நிலையில் விடுவிக்கப்பட்டார் எனவும்,இந்த வழக்கு மார்ச்-26 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் எனவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 250,000 டாலர் வரையில் அபராதம் விதிக்கப்படும் வகையிலான குற்றமாகும் என்று அசோசியேட்டட் பிரஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

Add your comments to World News

Monday, March 15, 2021

ஈரானில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 4 பேருக்கு தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

ஈரானில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 4 பேருக்கு தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று அந்நாட்டு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது

ஈரானில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 4 பேருக்கு தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஆண்களுக்கு ஈரானிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்த நிலையில் அது நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய செய்தி நிறுவனம் "போர்டல்" இன்று திங்கட்கிழமை(15/03/21) தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக காவ‌ல்துறையின் கூற்றுப்படி தூக்கிலிடப்பட்ட நான்கு பேரும் கடந்த ஆண்டு நாட்டின் வடகிழக்கு ஃப்ரீமேன்றை அடுத்த ஸ்ஃபிட் சாங்கில் பகுதியில் இரண்டு மலையேறும் நபர்களை கடத்தி, கணவனைக் கட்டிப்போட்டு மனைவியை 4 பேரும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து நடந்த குற்ற விசாரணையில் இறுதியில மரணதண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, வடகிழக்கு ஈரானின் மஷாத்தில் உள்ள மத்திய சிறையில் வைத்து இன்று(திங்கள்கிழமை) நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர் என்று செய்தி செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

ஈரானில் கொலை, கற்பழிப்பு, துப்பாக்கி முனையில் கொள்ளை, மற்றும் ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இதுபோல் பாலியல் பலாத்காரம் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் வழக்குகளிலும் குறிப்பாக விரைவாக விசாரனை முடிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இப்படி ஈரானில் தொடர்ந்து மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த பல ஆண்டுகளாக சர்வதேச விமர்சனங்களை அந்நாடு எதிர்கொண்டு வருகின்றன.

Add your comments to World News

Sunday, March 7, 2021

இந்தியா புறப்பட்ட விமானம் பயணியின் அட்டகாசம் தாங்க முடியாமல் அவசரகால அடிப்படையில் தரையிறங்கியது

இந்தியா புறப்பட்ட விமானம் பயணியின் அட்டகாசம் தாங்க முடியாமல் அவசரகால அடிப்படையில் தரையிறங்கியது;சம்பந்தப்பட்ட நபரை அதிகாரிகள் கைது செய்தனர்

Image credit: Air France Official

இந்தியா புறப்பட்ட விமானம் பயணியின் அட்டகாசம் தாங்க முடியாமல் அவசரகால அடிப்படையில் தரையிறங்கியது

பாரிஸிலிருந்து இந்தியாவின் டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் பிரான்ஸ் விமானம் புறப்பட்ட நிலையில் பயணி ஒருவரின் தொந்தரவு தாங்க முடியாததால் அவசர அவசரமாக பல்கேரியாவின் சோபியா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியதாக பல்கேரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் நடந்துள்ளது. இந்தியரான அந்த பயணி விமானத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே வன்முறையில் ஈடுபட தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் மற்ற பயணிகளுடன் சண்டையிட்டு விமான பணிப்பெண்களை தாக்கினார்.

மேலும் விமானியின் இருகையின் காக்பிட் கதவை பலமுறை பலமாக தாக்கி உடைக்க முற்பட்டார் எனவும் பல்கேரிய தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்தனர். பயணியின் இந்த செயல் காரணமாக விமானத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையில் விமானி சோபியா விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்க அனுமதி கோரினார். இதையடுத்து அந்த பயணி விமானத்திலிருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்ப்பட்டார் மற்றும் விமானத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றமாகும். இந்த பயணியின் பெயர் மற்றும் பிற விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவரை அதிகாரிகள் காவலில் எடுத்து நிலையில் விமானம் டெல்லிக்கு புறப்பட்டது, இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add your comments to World News

Monday, February 15, 2021

பாலைவனத்தில் பட்டினி கிடந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்

பாலைவனத்தில் பட்டினி கிடந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்;இந்த சம்பவம் தொடர்பாக தகவலை முதலில் உள்ளூர் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது

பாலைவனத்தில் பட்டினி கிடந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்

பாலைவனத்தில் சிக்கிய, குடும்பம் பட்டினி கிடந்தது உயிரிழந்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது.இந்த துயரமான சம்பவம் ஆப்பிரிக்க நாடான லிபியாவில் நடந்துள்ளது.சூடான் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இதில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலை முதலில் உள்ளூர் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. மேலும் அவர்களின் மரணம் குறித்த சில படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. புகைப்படங்களில் காரைச் சுற்றி சடலங்கள் கிடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பல உடல்கள் பாதி சிதைந்த நிலையில் காணப்பட்டன.மேலும் சில உடல்கள மணல் திட்டுகளால் ஓரளவு மூடபட்டு உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.

அந்நாட்டின் உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, குழந்தைகள் உட்பட சுமார் 21 பேர் இந்த பயணத்தில் ஈடுபட்டனர்.லிபியாவின் தலைநகரமான குஃப்ராவிலிருந்து தென்மேற்கே 400 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளை டொயோட்டா சீக்வோயா கார் கண்டுபிடிக்கப்பட்டது.காரின் அருகில் உடல்களில் சில கிடந்தன,அதில் மூன்று பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களின் உடல்கள் இருந்தன இருப்பினும், உடன் பயணம் செய்த மற்ற 13 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் சூடானின் எல் பேஸரில் இருந்து லிபியாவின் குஃப்ராவுக்கு இந்த குடும்பம் பயணம் மேற்கொண்டதாக லிபியா போலீசார் தெரிவித்தனர். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டது எனவும்,அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருந்தது எனவும், இந்த கடிதத்தை யார் கண்டுபிடித்தாலும் இது எனது சகோதரரின் தொலைபேசி எண் எனவும், நான் உங்களை கடவுளிடம் ஒப்படைக்கிறேன்.என் அம்மாவை உங்களிடம் அழைத்து வந்ததற்கு மன்னிக்கவும் என்று ஏழுதப்பட்டு இருந்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Add your comments to World News

Wednesday, January 27, 2021

குவைத்திறகு எகிப்து நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் மற்றும் அரசு வக்கீல்கள் இன்று வருகிறார்கள்

குவைத்திறகு எகிப்து நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் மற்றும் அரசு வக்கீல்கள் இன்று வருகிறார்கள்;நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைக்கு தீர்வு இந்த முடிவு

குவைத்திறகு எகிப்து நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் மற்றும் அரசு வக்கீல்கள் இன்று வருகிறார்கள்

குவைத்தில் உள்ள நீதித்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் டஜன் கணக்கான எகிப்திய நீதிபதிகள் மற்றும் அரசு வக்கீல்கள் இன்று குவைத்துக்கு வருவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது, அங்குள்ள கெய்ரோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஒரு சிறப்பு குவைத் ஏர்வேஸ் விமானம் மூலம் இவர்கள் புறப்பட்டதாக உள்ளூர் அரபு தினசரி நாளிதழ்

நீதித்துறை அமைச்சகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில்,கொரோனா பாதுகாப்பு அவசரக் குழு இதற்கான அனுமதி அளித்தது, நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைக்கு தீர்வு என்ற அடிப்படையில் குவைத் நீதிமன்றங்களில் வேலை செய்துவந்த இவர்களை மீண்டும் அழைத்து வருவது தொடர்பாக கொரோனா மறுஆய்வுக் குழுவின் உதவியை நீதி அமைச்சகம் கோரிய நிலையில் இவர்கள் இன்று குவைத் திரும்புகின்றனர்.

Add your comments to World News

Monday, January 18, 2021

அமெரிக்காவில் நுழைய இஸ்லாமிய நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த தடையை நீக்க புதிய அதிபர் பைடன் முடிவு

(அமெரிக்காவின் புதிய அதிபர் பைடன்)

அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் கடந்தமுறை பதிவேற்ற பிறகு குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளின் மக்களுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார், மேலும் பல இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அமெரிக்காவில் நுழைய விசா உள்ளிட்டவை வழங்கவும் தடைவிதித்து இருந்தார். இந்நிலையில் புதிய அதிபராக பைடன் பதிவேற்ற பிறகு இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாழுகின்ற இந்த பூமியின் பாதுகாப்பு தொடர்பான காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் சேர அமெரிக்கா முடிவு செய்துள்ளது எனவும், அதேபோல இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் நாடுகளிலிருந்து மக்கள் வர பிறப்பித்திருந்த தடைகளை நீக்க ஜோ-பைடன் முடிவு செய்துள்ளார்.அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் கையெழுத்திட உள்ள முக்கிய திட்டங்களில் இவை இரண்டும் அடங்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் கடந்தமுறை வெள்ளை மாளிகையில் அதிபராக அரியணை ஏறியதும் பதவி விலகயுள்ள அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த சர்ச்சைக்குரிய கொள்கை முடிவுகளை அனைத்தையும் பின்வாங்கவும் பைடன் முடிவு செய்துள்ளதாக அவரது அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா நெருக்கடி, இனவெறி சர்ச்சை, பொருளாதார நெருக்கடி, மாறிவரும் காலநிலை நெருக்கடி ஆகிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்த பைடன் முடிவு செய்துள்ளதாகவும் அங்கிருந்த வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த 2017-இல் இஸ்லாம் மக்கள் அதிகம் வாழும் ஏழு நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவில் நுழைய ட்ரம்ப் பிறப்பித்திருந்த தற்காலிக பயணத் தடையையும் நீக்க பைடன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Add your comments to World News

Wednesday, December 30, 2020

இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களின் தற்காலிக தடையை 2021 ஜனவரி 7 ம் தேதி வரை நீட்டிப்பு


புதிதாக மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும் சர்வதேச விமானங்களுக்கான தற்காலிக தடையை 2021 ஜனவரி 7 ம் தேதி வரை மேலும் நீட்டிப்பு செய்து இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பான செய்தி அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளன.

(Photo Credit:DGCA)


Add your comments to World News

Tuesday, December 22, 2020

மலே‌சியா அரசு அறிவிப்பு; தொழிலாளர்கள் குறைந்த அபராதம் செலுத்தி தாயகம் திரும்பலாம்

Dec-22,2020

மலேசிய அரசு தொழில் சட்டத்தை மீறிய வெளிநாட்டு தொழிலாளர்கள் குறைந்த அபராதத் தொகையை செலுத்தி தாயகம் செல்லும் வாய்ப்பு 21-12- 2020(திங்கள்க்கிழமை) நேற்று முதல் வழங்கியுள்ளது. நீண்டகாலமாக விசா இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக உள்ள தொழிலாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தாயகம்  செல்லலாம்.

(வழிமுறை விளக்கும் புகைப்படம்)


இதற்கு நீங்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும்:

1. குடிநுழைவுத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில்  முன்பதிவு செய்ய வேண்டும்.

இணைய தளத்தின் Link: http://sto.imi.gov.my

2. முன்பதிவு தேதியிலிருந்து 14 நாட்களுக்குள் விமானப் பயணச்சீட்டு எடுக்க வேண்டும்.

3. கடவுச்சீட்டின்( Passport) முன்பக்கம் பின்பக்கம் மற்றும் மலேசியாவுக்குள் இறுதியாக நுழைந்த தேதியின் முத்திரை உள்ள பக்கம் ஆகிய மூன்றையும் நகல்கள் எடுக்க வேண்டும்.

4. மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் நீங்கள் முன்பதிவு செய்து பெற்ற தேதியில் நேரடியாக சென்று அபராத தொகை ரிங்கிட்-500 செலுத்தி அனுமதி பெற்ற பிறகு, நீங்கள் தாயகம் திரும்புவதற்கு விமான பயண தேதி இருநாட்கள் இருக்கையில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

இந்த சலுகை ஜூன்-30,2021 வரையில் நடைமுறையில் இருக்கும் எனவும், மத்திய அரசு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப் பயண சீட்டு விலையை குறைத்தாலோ அல்லது தமிழக அரசு குறைந்த விலையில் பயணச்சீட்டு வழங்கி விமானத்தை அனுமதித்தாலோ எண்ணற்ற இந்தியர்கள் உயிரோடு தாயகம் திரும்பி தன் குடும்பத்தோட இணைந்து விடுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Add your comments to World News

Tuesday, December 8, 2020

உலகில் முதல் முறையாக 90-வயது பிரிட்டன் பாட்டிக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது:

உலகில் முதல் முறையாக 90-வயது பிரிட்டன் பாட்டிக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது:

(Photo Credit: Jacob King)

Dec-08,2020

பிரிட்டன் நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணிக்கு இங்கிலாந்தின் கோவென்ட்ரியில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் வைத்து மார்கரெட் கீனன்(வயது-90) என்ற பாட்டிக்கு "ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட்-19" என்ற தடுப்பூசி போடப்பட்டது என்று அந்நாட்டு பத்திரிகைகள் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.

வரலாற்றில் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு தடுப்பூசியைப் பெற்ற உலகின் முதல் நபர்களாக இந்த  பிரிட்டன் பாட்டி  திகழ்வார். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வரவிருக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையை நினைவுகூறும் வகையில் Happy Christmas என்ற T Shirts அணிந்திருந்தார்.1.5 மில்லியன் மக்களைக் கொன்ற ஒரு தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முதல் படியாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது. 

தடுப்பூசி பெற்ற பின்னர் டீன் கூறுகையில் கோவிட் -19 க்கு எதிராக போட்ட முதல் தடுப்பூசிப் பெற்ற  நபராக நான் மிகவும் பாக்கியம் நபராக உணர்கிறேன் என்றார். வரவிருக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட ஆவலாக இருக்கிறேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார். மத்திய இங்கிலாந்தில் கோவென்ட்ரியில் திருமதி கீனன் வசித்து வருகின்றார். 



Add your comments to World News

Wednesday, December 2, 2020

உலகில் முதல் கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் மக்களுக்கு பயன்படுத்த அனுமதி:

உலகில் முதல் கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் மக்களுக்கு பயன்படுத்த அனுமதி:



Dec-1,2020

கொரோனோ வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் சோதனை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு செலுத்தி ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடத்தப்பட்ட சோதனையிலும் வெற்றி கிடைத்த நிலையில் இந்த மருந்து முதல் முறையாக பிரிட்டன் மக்களுக்கு போடப்படும் என்று சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது.

பல்வேறு நோய்கள் மூலம் நீண்டகால அவதிப்படும் மக்களுக்கு கொரோனா பாதிப்பு எளிதில் தொற்றிக்கொள்ளும் என்பதால் இந்த மருந்து முதலில் அவர்களுக்கு அடுத்த வாரத்தின் துவக்கத்தில் வழங்கபடும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி 95 சதவீதம் வெற்றியடைந்துள்ள என்று அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும் குவைத்தில் அரசு சார்பிலும் இந்த கம்பெனியிடம் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Add your comments to World News

Saturday, November 28, 2020

ஈரான் நாட்டின் முக்கிய அணு விஞ்ஞானி படுகொலை:

ஈரான் நாட்டின் முக்கிய அணு விஞ்ஞானி படுகொலை:


Nov-28,2020

ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே தலைநகர் தெஹ்ரான் அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே  ஈரானின் இரகசிய அணு ஆயுத திட்டத்தின் பின்னணியில் சூத்திரதாரி என்று மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் அவரை கருதுகின்றன. அவர் "ஈரான் அணு குண்டின் தந்தை" என்று வர்ணிக்கப்பட்டார்.

மொஹ்சென் பக்ரிசாதே தலைநகர் தெஹ்ரான் அருகே  காரில் சென்று கொண்டு இருந்த் போது அவரது கார் வெடிகுண்டு மூலம் குறிவைக்கபட்டது. தொடர்ந்து 5 பேர் அடங்கிய குழை துப்பாக்கி சூடு நடைபெற்றது.இதில் படுகாயம் அடைந்த ஃபக்ரிசாதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தார்என்று தெரிவித்தனர். இதில் அவருடைய பாதுகாவலர் படுகாயமடைந்தார். 

ஈரான் உற்பத்தி செய்யும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவு அதிகரித்திருப்பது குறித்த புதிய கவலையின் மத்தியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் சிவில் அணு மின் உற்பத்தி மற்றும் இராணுவ அணு ஆயுதங்கள் இரண்டிற்கும் ஒரு முக்கிய அங்கமாகும்.

ஈரான் தனது அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று ஈரான் வலியுறுத்தி வந்தது. 2010 மற்றும் 2012 க்கு இடையில், நான்கு ஈரானிய அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் கொலைகளுக்கு இஸ்ரேல் உடந்தையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியது. மே 2018 இல் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த விளக்கத்தில் ஃபக்ரிசாதேவின் பெயர் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Add your comments to World News

Saturday, November 14, 2020

தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் கனடா பிரதமர்

தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் கனடா பிரதமர்:

நவம்பர்-14,2020



இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட தீபாவளி கொண்டாட்டத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  இன்று காணொளிக் காட்சி வாயிலாக பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில், “உண்மையும், வெளிச்சமும், நன்மையும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை தீபாவளி நினைவூட்டுகிறது. இந்த செய்தியை கொண்டாடுவதற்காக இன்று மாலை நடைபெற்ற காணொளிக் காட்சி வாயிலான நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமல்லாமல் எதிர்க்கட்சி தலைவர் உள்பட கனடாவை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர். கனடாவில் 1998ஆம் ஆண்டு முதல் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 20-வது முறையாக கனடாவில் தீபாவளி கொண்டாடப்படுவது கூடுதல் சிறப்பு.

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்புக்கு மத்தியில் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டிய அவசியம் இருக்கிறது. பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் தீபாவளி கொண்டாட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் காணொளிக் காட்சி வாயிலாக தீபாவளியை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Add your comments to World News

Monday, November 9, 2020

குவைத் மற்றும் அமெரிக்காவின் உறவு மற்ற எல்லா வளைகுடா நாடுகளில் இருந்து முற்றிலுமாக மறுபட்டுள்ளது:

குவைத் மற்றும் அமெரிக்காவின் உறவு மற்ற எல்லா வளைகுடா நாடுகளில் இருந்து முற்றிலுமாக மறுபட்டுள்ளது:

நவம்பர்-9,2020

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோபிடன்  பதவியேற்பதால், வாஷிங்டனுடனான குவைத் உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவி நீங்கும் ஜனாதிபதி டிரம்பிற்கு நெருக்கமான வளைகுடா நாடுகளில் முக்கியமான நாடு குவைத் ஆகும் . வேறு சில வளைகுடா நாட்டுத் தலைவர்கள் டிரம்புடன் வலுவான உறவுகளைப் பேணினர், ஆனால் அவர்கள் உறவுகள் அரசியல் விட தனிப்பட்ட முறையில் இருந்து.

ஆனால் டிரம்ப்புடனான(அமெரிக்காவுடன்)  உறவைப் பேணுகையில், குவைத் எப்போதுமே தனது சொந்த அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக வேரூன்றி இருப்பதை எப்போதும் காத்து வருகிறது. அதனால் தான் டிரம்ப் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தகவல் மற்ற வளைகுடா நாடுகளின் தலைவர்கள் மத்தியில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அந்த செய்தி குவைத்தை சிறிதும் பாதிக்கவில்லை.

மேலும் புதிதாக அதிபராக ஜோபிடன் வெற்றியாளராக அறிவித்தபோது முதன்முதலில் வாழ்த்திய அரிய உலகத் தலைவர்களில் ஒருவர் குவைத் அமீர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா என்பதும் குறிப்பிடத்தக்கது. குவைத் அரசு பின்பற்றிய வலுவான வெளியுறவுக் கொள்கை மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளங்களால் தான் இஸ்ரேலுடனான உறவை சீராக்க டிரம் கொடுத்த அழுத்தத்தை சமாளித்து சொந்த நிலையில் உறுதியாக நிற்க்க முடிந்தது.

ஆனால் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இஸ்ரேலுடனான உறவை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ள குவைத் மற்றும் கத்தார் மீது அழுத்தத்தை அதிகரிக்க வாஷிங்டன் பிற பல்வேறு தந்திரத்தை  பயன்படுத்தக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால்  ஜோபிடன் வெற்றிபெற்று ஆட்சியில் வந்ததால் குவைத் மற்றும் கத்தாருக்கு இந்த நெருக்கடியிலிருந்து தற்காலிக ஆறுதல் கிடைத்துள்ளது 

இஸ்ரேலுக்கான அணுகுமுறையில் குடியரசுக் கட்சிக்கும், ஜனநாயகக் கட்சிக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை என்றாலும், ஜோபிடன் மத்திய கிழக்கு தொடர்பான பிற பிரச்சினைகளில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம், ஏமன் மற்றும் சிரியாவில் நடந்த போர்கள், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் எண்ணெய் விலை வீழ்ச்சி போன்ற மத்திய கிழக்கில் பிரச்சினைகள் குறித்து புதிய அதி கவனம் செலுத்தும் என்று கருதப்படுகிறது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் ஆரம்பத்தில் இருந்தே குவைத் நடுநிலையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோல் கத்தார், குவைத் மற்றும் ஈரான் மற்ற வளைகுடா நாடுகளை விட தங்களுக்குள் சிறந்த உறவைப் பேணுகின்றன. 

இதன் காரணமாக ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் பைடன் நிர்வாகம் குவைத், கத்தார் தலைமையில்  ஈரானுடன் மத்தியஸ்தம் செய்ய முற்படலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஆனால் தற்போது கத்தாருடன் வேறுபாடுகள் உள்ள சவுதி, அமீரகம்,  பஹ்ரைன், எகிப்து போன்ற நாடுகள்  கத்தார் சம்பந்தப்பட்ட மத்தியஸ்த முயற்சிகளை ஏற்க வாய்ப்பில்லை.  அவ்வாறான நிலையில், இந்த பணி குவைத்துக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

கத்தார் பிரச்சினையில்  குவைத்தின் மத்தியஸ்த முயற்சிகள் அமெரிக்க நிர்வாகத்தால் பலமுறை  பாராட்டப்பட்டுள்ளன.  ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை ஓரளவு நீக்குவதன் மூலம் பைடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு வழி வகுப்பார் என்று தெரிகிறது. இதற்கு காரணமும் உண்டு. அதாவது ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் ஒபாமா ஆட்சி காலத்தில் துணை ஜனாதிபதி பைடன் இருந்த போது கையெழுத்தானது.

ஒபாமா நிர்வாகத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும்  இந்த ஒப்பந்தம் பைடனின் முயற்சி மூலம் வெற்றிபெற்றால் அது பைடனுக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் பெருமை சேர்க்கும் மிகப்பெரிய விஷயம் என்பதில் ஐயமில்லை.

ஒபாமா நிர்வாகத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் காரின் நிறைவு பிடனுக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். எனவே ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான அமைதி முயற்சிகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சினைகளில் தீர்வு காண்பதே புதிய அமெரிக்கா அதிபரின் முக்கிய குறிக்கோளாக இருக்கும். இதையடுத்து பைடன் தலைமையிலான புதிய நிர்வாகத்தின் ஆட்சியில்  குவைத்தின் பங்கு என்னவாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் யோசித்து வருகின்றனர்.

News Editing: Ktpnews Official 


Add your comments to World News

Sunday, November 8, 2020

குவைத் சுற்றுலாவுக்கு என்று யாரும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறது:

குவைத் சுற்றுலாவுக்கு என்று வெளிநாடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறது:



நவம்பர்-8,2020

துருக்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு குவைத் வெளியுறவு அமைச்சகம் தனது குடிமக்களைக் கேட்டுள்ளது.

துருக்கியின் முக்கிய நகரமான புர்சாவில் நேற்று முன்தினம் மாலை கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட குடிமகன் அப்துல் லத்தீப் சயாத் அல்-காலிடி (52) மற்றும் அவரது மனைவி தலால் அவத் அல் முத்தாரி (49) ஆகியோர் இறந்தனர். மேலும், பல கோவிட் இறப்புகள் அங்கிருந்து பதிவாகியுள்ளன என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவிட் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது அலைகளைத் தொடங்கியுள்ளது.  இந்த சூழலில், குவைத் வெளியுறவு அமைச்சகம்  இந்த  எச்சரிக்கையை வெளியிட்டது.


Add your comments to World News

Saturday, January 11, 2020

உக்ரைன் விமான விபத்து மன்னிச்சுடுங்க; தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம், ஈரான் அரசு பகீர் ஒப்புதல்:

உக்ரைன் விமான விபத்து மன்னிச்சுடுங்க; தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம், ஈரான் அரசு பகீர் ஒப்புதல்:


ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமான நிலையத்துக்கு அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் சம்பவ இடத்திலே பலியாகினர்.

ஈராக்கில் அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று யூகங்கள் எழுந்தன. ஆனால் அதனை நிராகரித்த ஈரான் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்தாக கூறியது.

விமானம் நடுவானில் பறந்தபோது எந்திர கோளாறால் திடீரென தீப்பிடித்ததாகவும், அதனால் விமானத்தை மீண்டும் விமான நிலையத்துக்கு திருப்ப முயற்சித்தப்போது விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் விபத்து குறித்து விசாரணை நடத்தும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே சமயம் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை விமான உற்பத்தியாளரான போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ வழங்க மாட்டோம் என ஈரான் கூறியது. இது விமான விபத்து தொடர்பான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. ஆனால்,  உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா மற்றும் கனடா குற்றம் சாட்டியது.

இந்நிலையில் ஈராக்கில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தங்களுடைய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டதுதான் என்று ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறது. ஈரான் அரசு தொலைக்காட்சியில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி உக்ரைன் விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம். பதற்றம் நிறைந்த ராணுவ பகுதி அருகே உக்ரைன் விமானம்  பறந்து கொண்டிருந்ததாகவும்.

ராக்கெட் தாக்குதல் நடத்தும் போது தவறாக சுட்டு வீழ்த்திவிட்டோம் எனவும்,தெரிந்து செய்யவில்லை. இந்த விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக முறையான விசாரணைக்கு ஒத்துழைப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

வீரர்கள் கவனக்குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரண நிதி அளிக்கப்படும். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது என்று, ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த செயல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Add your comments to World News